பெரியபுராணத்தில் வாழ்வியல் நெறி

Life values in Periyapuranam

Authors

  • Dharmalingam Nadarasan Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.5

Abstract

The PeriyaPuranam, defined as the great purana or history of the holy devotees. It carries the genre of Tamil poetic account depicting the legendary lives of the sixty-three Nayanmars or saints and the canonical poets of Saivism. Sekkilar  the author of PeriyaPuranam, had the true knowledge and best of poetic expression in describing the history of  Saiva saints. The author also had the neutrality in his sayings and he had the devotion for the all 63 Saiva saints. On top of that, Sekkilar had the true love for God. Though only Sekkilar can match himself, this article is an effort to give a glimpse of values that PeriyaPuranam depicts to its readers. Primarily PeriyaPuranam, describes the exquisiteness of Tamil language, Tamil culture in detail and Tamil religion. This extraordinary writing also carries one vital message. It stress and provide us evidence on how the Tamil Saivites can urge with divine energy by conducting prayers in Tamil language itself. Furthermore, PeriyaPuranam also proofs that only through love upon the Supreme Being and his creation will help the souls to implore with the divine force. In several situation Sekkilar endorses that only spiritual wisdom is always more valuable than one’s huge materialistic collections. One of the major angles that PeriyaPuranam covers is in order for one to leave without any sort of fearing life, one has to hold on and consistently trust upon the Supreme Being. For one to do so PeriyaPuranam intensely encourages one to get rid of any type of faults from our heart and mind through several history of Saiva saints.

Key words: PeriyaPuranam, Nayanmars, Saiva saints, Tamil Saivites, Tamil culture, Tamil religion, fearing life, true love upon the Supreme Being

 

ஆய்வுச்சுருக்கம்

 

பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கையைத் தமிழ்ச் செய்யுள்கள் வாயிலாகப் படைப்பிக்கப்பட்ட இலக்கியமாகும். பெரியபுராணத்தில் இறைவன் மீது உண்மை பக்தியைக் கொண்டிருந்த சைவசமயச் சான்றோர்களாகிய 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விரித்துரைக்கும் பாங்கிலிருந்து இதனை இயற்றிய சேக்கிழார் இத்துறையில் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவு, நடுநிலைமை, கவி ஆளுமை ஆகியன அறியப்படுகின்றது. பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாருக்கு இணை அவரே ஆகையால் அவரைத் தவிற பெரியபுராணத்திற்கு வேறு யாரும் விளக்கம் கொடுக்க இயலாது என்ற போதிலும் இக்கட்டுரையானது வாசகர்களுக்குப் பெரியபுராணத்தில் வெளிப்படும் வாழ்க்கை நெறிகளை விவரிக்க முயற்சி செய்துள்ளது. முதல் நிலையில் பெரியபுராணம் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு, தமிழ்ப் பண்பாடு, தமிழர் சமயம் ஆகியவற்றை விளக்குகிறது. பெரியபுராணம் தமிழ்ச்சைவ அடியார்கள் தமிழ் வழிபாட்டின் மூலம் அளப்பரிய ஆற்றலை அடையப்பெற்றமையை ஆதாரத்தோடு முன்வைக்கிறது. தொடர்ந்து இறைவன் மீதும் அவரது படைப்பின் மீதும் கொள்ளும் தூய அன்பின் வாயிலாகவே ஆன்மாவானது புனிதத்துவம் பெற முடியும் என்பதைப் பெரியபுராணம் ஆதாரப்பூர்வமாக நிறுவுகின்றது. ஒரு சில சூழல்களின் வாயிலாகச் சேக்கிழார் ஆன்மீகப் பேரடைவே உலகியல் பொருளாதார அடைவைக் காட்டிலும் மேன்மை மிக்கது எனும் கருத்தை சிறப்பாகச் சுட்டுகின்றார். இவ்வுலகை விட்டு நீங்கும் போது வாழ்க்கையைப் பற்றிய எவ்வித பயமும் இல்லாமை மற்றும் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை ஆகியனவே வாழ்க்கையின் நிறைவாகப் பெரியபுராணம் முன்வைக்கிறது.

குறிப்புச் சொற்கள்: பெரியபுராணம், நாயன்மார்கள், சைவ அடியார்கள், தமிழ்ப் பண்பாடு, தமிழர் சமயம், வாழ்க்கைப் பயம், இறைவன் மீதான உண்மை அன்பு.

Downloads

Download data is not yet available.

Author Biography

Dharmalingam Nadarasan, Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Research Student (Ph.D), at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Downloads

Published

2015-07-31

Issue

Section

Articles