மலேசியத் தமிழ் மேடை நாடகக்கலை வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு. (The Role of Tamil Nadu in the Development of Malaysian Tamil Stage Dramas.)

Authors

  • Sababathy V, Associate Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol4no1.6

Abstract

Tamil stagecraft has retained its credentials even in the immigrant countries. This Paper deals with how Malaysian Tamil stage has its impact of Tamil Nadu. In the beginning, Malaysian Tamils adopted street drama in the rural Malaysia and stage drama in the urban areas. In the early days of the Twentieth Century so many stage artists with their theatre have visited Malaysia. These theatre artists have also trained the local artists in Malaysia. The Theatre artists in Tamil Nadu who later became Cine Artists also have contributed their part in the development of stagecraft in Malaysia. Therefore, there is a similarity in the stagecraft of Tamil Nadu and Malaysia. Though after the Second World War, Malaysian Tamil stage tried to establish its own base, it has the resemblance of Tamil Nadu stage. Before the Second World War, the themes were Puranas and later social themes after thirties. The plays of many are dramatists like Sankaradas Swamigal, Pammal Sambanda Mudaliar have been staged here and through them Malaysian stage was developed.

.

 

Key words:

Tamil Nadu, Malaysia, Street Drama, Stage Drama, Actors, Stage, Stage, Stage Craft

 

ஆய்வுச் சுருக்கம்:

குடியேறிய நாடுகளிலும் நாடகக்கலை தமிழ் மரபிற்கேற்பவும் மண்ணின் மணத்திற்கேற்பவும் தமிழர்களால் வளர்க்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் மலேசிய மண்ணில் நாடகம் வளர்வதற்குத் தமிழகம் ஆற்றியுள்ள பங்கினை இக்கட்டுரை விவரிக்கின்றது.  தொடக்கத்தில் மலேசியாவில் நாடகக்கலை தோட்டப்புறத் தமிழர்களால் தெருக்கூத்தாகவும் நகர்ப்புறத் தமிழர்களால் மேடை நாடகங்களாகவும் வளர்க்கப்பட்டுள்ளது.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்திலிருந்து மேடை நாடகக்குழுக்கள் இந்நாட்டிற்கு அதிகமாக வந்து சென்றுள்ளன.  நாடக நடிகர், வாய்ப்பாட்டுக் கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், நாடகப் பயிற்சியாளர் எனத் தமிழக நாடகக்கலைஞர் பலரும் இங்கு வந்து உள்ளூர்க் கலைஞர்களுக்கு நாடகக்கலை ஆசிரியர்களாக இருந்து பயிற்சியளித்து, இம்மண்ணில் நாடகக்கலை சிறப்பாக வளர்வதற்குப் பங்காற்றியுள்ளனர்.  தமிழகத்தில் பிரபலமாயிருந்த பல நாடகக்குழுக்களும் தொடக்கத்தில் நாடகநடிகர்களாக இருந்து பின்னர்த் திரையுலகிற்குச் சென்று புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களும் இந்நாட்டிற்கு நாடகத்திற்காக வந்து இங்கு நாடகக்கலை வளரத் துணை நின்றுள்ளனர். அதனால் தமிழகச் சாயலில் பல நாடகக்குழுக்கள் இங்கு உள்ளூர்க் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குமுன் உள்ளூர் நாடகக்கலைஞர்கள் என ஒரு பரம்பரை இங்கு உருவாகி விட்டாலும், நாடகக்கதை, உரையாடல், அரங்க அமைப்பு போன்றவற்றிற்குத் தமிழகத்தையே நம்பியிருந்தனர்.  உலகப்போருக்குமுன் புராண, இதிகாசங்களிலிருந்து கதைகளைப்பெற்று நாடகமாக அரங்கேற்றினர்.  தமிழகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த நாடகங்களையே இங்கும் அரங்கேற்றினர்.  முப்பதுகளுக்குப் பிறகே தமிழகத்தைப்போலவே இங்கும் சமூக நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின.  தமிழக நாடக உலகில் மிகப்பெரும் ஜாம்பவான்களாயிருந்த சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரின் நாடகங்கள் இங்குப் பரவலாக அரங்கேற்றப்பட்டு நாடகக்கலை வளர்க்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் இந்தப் பங்களிப்பினால்தான் இந்நாட்டில் மேடை நாடகக்கலை வளர்ந்தது.

 

குறிப்புச் சொற்கள்:

தமிழகம், மலேசியா, தெருக்கூத்து, நாடகக்கலை, மேடை நாடகம்,  நாடக நடிகர், அரங்கு, நாடக நுட்பம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Sababathy V, Associate Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Dr.V.Sababathy is an Associate Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Downloads

Published

2016-12-25

Issue

Section

Articles