புத்ததத்தரால் கிடைக்கப்பெறும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புகள் (Buddhadatta and his contributions to the History of Tamil Nadu)

  • Jothi S. Themozhi, Dr.

Abstract

Abstract
From the third through the sixth century A.D, which is after the Sangam period, Tamil Nadu was under the rule of the Kalabhra dynasty. Since there was a lack of historical evidence to know about their reign, South Indian historical scholars term this period in history as ‘Kalabhra interregnum.’ From the early 20th century onwards, some supporting archeological inscriptions and literary scriptures began to shed light on the Kalabhras. However, the information about them is still scarce. The Velvikudi plates (c. 770) of the Pandyan king Parantaka Nedunjadaiyan mention the Kalabhras were the first archeological inscriptions; these were found around the 1920s. In the literature front, Buddhist monk Buddhadatta, a reputable Pali language writer of the fifth century who belonged to Uraiyur, also mentions a Kalabhra ruler during his time. He mentions his contemporary, King Achyutavikranta (who could be a Buddhist too, but not for sure) of the Kalabharakula, who ruled over the Chola country from Kaveripumpattinam. Thus, Buddhadatta’s literary work is as important as Velvikudi inscription in the historical perspective. The period of Kalabhras was marked by the ascendancy of both Buddhism and Jainism by historical scholars. This article identifies some passages from Buddhadatta’s literary work that mentions the Kalabhra ruler of Buddhadatta’s time, King Achyutavikranta. Based on earlier scholars’ research, this article also attempts to identify the location of Buthamangalam, where the monk Buddhadatta resided while penning his work during the fifth century Chola country.
Key Words: Kalabhra interregnum, Kalabhra dynasty, Velvikudi plates, Buddhadatta, Achyutavikran, Buthamangalam, Vinaya Vinicchaya, Abhidhamma


 


கட்டுரைச் சுருக்கம்


சங்ககாலத்திற்குப்  பிற்பட்ட,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து - ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட  ஒரு மூன்று நூற்றாண்டுகளுக்குக் களப்பிர மன்னர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்று சென்ற நூற்றாண்டில் கிடைத்த, எட்டாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டின்வழியாக வரலாற்று ஆய்வாளர்கள் அறிந்தார்கள்.  இருப்பினும் அக்கால அரசர்கள் யாவர், அவர்களது ஆட்சிமுறை என்ன, மக்களின் நிலை எவ்வாறிருந்தது போன்ற  செய்திகளைத் தரும் தொல்லியல் மற்றும் இலக்கியத்  தரவுகள் இல்லாத காரணத்தால் அக்காலகட்டத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் வரலாற்றின் இருண்ட காலமாகக் குறிப்பிட்டார்கள். இன்றும் அதிகத் தரவுகள் கிடைக்கவில்லை.  ஆயினும், சில தொல்லியல் தடயங்கள் கிடைத்த வண்ணம்தான் உள்ளன.  இலக்கியக்  குறிப்பு என நோக்குகையில்; உறையூரில் வாழ்ந்த ஆச்சாரிய புத்ததத்த தேரர் என்ற  பௌத்த பிக்கு எழுதிய பாலி மொழி நூல்கள், அவர் வாழ்ந்த  ஐந்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட  அச்சுதக் களப்பாளன் என்ற களப்பிர மன்னனைக் குறிக்கிறது. அவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும், பூதமங்கலத்திலும் உள்ள புத்த விகாரங்களில் தான் தங்கியிருந்த பொழுது தனது நூல்களை எழுதியதாகக் குறிப்பிடுகிறார் புத்ததத்தர்.  இது வேள்விக்குடிச் செப்பேட்டிற்கு இணையான களப்பிரர் குறித்த செய்தி தரும் முக்கியத்துவம் வாய்ந்த முதல் இலக்கியக் குறிப்பு எனலாம். காவிரிப்பூம்பட்டினத்தை   நாம் அறிவோம். புத்ததத்தர் தங்கியிருந்த பூதமங்கலம் எங்கிருந்திருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தரும் குறிப்பை மீள்பார்வை செய்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை.


 


கருச் சொற்கள்:  களப்பிரர் காலம், களப்பிர வம்சம், வேள்விக்குடிச் செப்பேடுகள், புத்ததத்தர், அச்சுதவிக்ரன் , பூதமங்கலம், வினைய வினிச்சய, அபிதம்மம்.

Author Biography

Jothi S. Themozhi, Dr.

The author is a Freelance Researcher and writer (USA) as well as Editor for “Min Tamil Medai,” the Quarterly e-zine for the Tamil Heritage Foundation. She holds a PhD in Public Administration. jsthemozhi@gmail.com

Published
2018-12-30
How to Cite
S. THEMOZHI, Jothi. புத்ததத்தரால் கிடைக்கப்பெறும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புகள் (Buddhadatta and his contributions to the History of Tamil Nadu). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 69-79, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/15513>. Date accessed: 15 dec. 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.8.
Section
Articles