தமிழிலக்கணத்தில் உடம்படுமெய்யின் உருபையும் சூழலையும் வரையறுத்தவர் வீரசோழிய ஆசிரியரா? (Are suffixe and situation in Udampadumei in Tamil Grammar propounded by the author of Veeracholiyam?)

Authors

  • Manonmani Devi M.A.R Annamalai, Dr. Sultan Idris Education University

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.4

Keywords:

Keywords: Tholkaappiyam, Veeracholiyam, Udampadumei, suffixes, Ilampuranar

Abstract

Next to Tholkaappiyam, the grammar book 'Veerasoliyam', written in the 11th century, is quite a notable one. This has been established as the first book written, incorporating the Sanskrit tradition into the Tamil grammar. Tholkaappiyam stresses only that the ending vowel sound of a preceding word and the initial sound of the following word when pronounced without a break in - between (gliding), the term 'Udampadumei' is required. With regards to this, the limitations to 'Udampadumei' was first mentioned by the book 'Veerasoliyam', according to early researchers.This research puts forth that all the details concerning 'Udampadumei' found in Veerasoliyam, are believed to be derived from Ilampooranar's  explanation and Tholkaappiyam's 'seiyyul' and later could have been incorporated into it. Hence, until Ilampooranar's lifetime period is ascertained, the conclusion of the early researchers claiming that the situations where the use of suffixes in Udampadumei are solely propounded by the author of Veerasoliyam, cannot be accepted. As such, this research article negates the claim with substantial evidence.

தொல்காப்பியத்திற்குப் பிறகு, 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணநூலான வீரசோழியம் குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். தமிழ் இலக்கணத்துடன் வடநூல் மரபும் இணைந்து இயற்றப்பட்ட முதல்நூல் இதுவாகும். ஈற்றெழுத்தும் முதலெழுத்தும் உயிரொலிகளாக உள்ள சொற்களைக் கால இடைவெளியின்றித் தொடர்ந்து ஒலிக்கும்போதுதான் உடம்படுமெய் தேவைப்படுகிறது என்ற கருத்தை மட்டுமே தொல்காப்பியம் கூறுகிறது.  இந்நிலையில், உடம்படுமெய்யின் வரையறையை முதலில் கூறிய நூல் வீரசோழியமே என்பது முன்ஆய்வாளர்களின் கருத்தாகும். வீரசோழியத்தில் காணப்படும் உடம்படுமெய் குறித்த தகவல்கள் அனைத்தும் இளம்பூரணர் உரையிலிருந்தும் தொல்காப்பிய நூற்பாவிலிருந்தும் எடுத்து இணைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற கருத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது. எனவே, இளம்பூரணர் வாழ்ந்த காலம் உறுதிசெய்யப்படும்வரை, உடம்படுமெய் வரும் சூழலையும் உருபையும் வரையறுத்தவர், வீரசோழிய ஆசிரியர்தான் என்ற முன் ஆய்வாளர்களின் முடிவுவை ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை இவ்வாய்வுக்கட்டுரை, சான்றுகளுடன் நிறுவியுள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-07-16

Issue

Section

Articles