பிலிப்புஸ் பால்டியூஸ் ஆவணங்கள் வழங்கும் கி.பி 17ம் நூற்றாண்டு தூத்துக்குடி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் (The 17th century Historical References to Thoothukudi by Fr.Philippus Baldaeus)

Authors

  • Dr.Subashini Kanaga Kanagasundaram Tamil Heritage Foundation

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.1

Keywords:

டச்சு, டச்சு கிழக்கிந்திய வணிக நிறுவனம், பிலிப்புஸ் பால்டியுஸ், நிலவரைப்படம், தூத்துக்குடி, கொற்கை, சங்க இலக்கியம், வணிகம், சோழமண்டலக் கடற்கரை

Abstract

தமிழகத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொள்ள ஐரோப்பியர்களின் ஆவணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களின் ஆவணங்கள் எனும்போது பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களிலும் அதற்கு அடுத்த நிலையில் ஆங்கிலேய அதிகாரிகளது ஆவணங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு டச்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் அல்லது டேனிஷர்கள் போன்றோரது ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்துவது  மிகக் குறைவு. இந்தக் கட்டுரை அக்குறையைச் சுட்டிக் காட்டி  கி.பி. 17ம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து அங்கு சில ஆண்டுகள் தங்கியிருந்து, பின்னர் தமிழகம் வந்து அங்கு டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராகப் பணிபுரிந்த பாதிரியார் பிலிப்புஸ் பால்டியுஸ் எழுதி வைத்த ஆவணங்களையும் அவர் உருவாக்கிய வரைபடங்களையும் அறிமுகப்படுத்துகின்றது. பாதிரியார் பால்டியுஸ் அவர்களது ஆவணங்கள் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் நிலவிய வணிக நிலவரங்களையும், டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளையும், அருகாமை பகுதிகளான ராமேஸ்வரம் பற்றிய செய்திகளையும், அக்காலத்தில் நிலவிய போர்த்துக்கீசியர்களுடனான சவால்கள் நிறைந்த வணிக முயற்சிகளைப் பற்றியும் விவரிக்கின்றன. பாதிரியார் பால்டியூஸ் அவர்கள் நிலவரைப்பட தயாரிப்புகளில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டமையினால் இன்று தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட சில செய்திகளை இவரது வரைபடங்களின் வழியாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரை, தமிழக வரலாற்றின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்வோர் டச்சுக்காரர்கள் உருவாக்கிய  ஆவணங்களையும் வரைபடங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-19

Issue

Section

Articles