உயரியச் சிந்தனையும் சங்க இலக்கியமும் (Niche Thinking in Caṅkam Literature)
Abstract
சங்க இலக்கியம் பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக திகழ்கிறது. இந்த செவ்வியல் இலக்கியங்களின் வாயிலாக பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை நம்மால் அலசி ஆராய முடிகின்றது. குறிப்பாக வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் கொள்கை; அதனை கடைப்பிடிப்பிடிக்க அவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை ஆராயும் போது, பழந்தமிழரின் சிந்தனைகள் நமக்கு புலப்படுகிறது. சிந்தனைகள் பலவகைப்படும். அதில் உயரியச் சிந்தனை எனப்படுவது ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியிணை குறிப்பதாகும். முறையான மூளை வளர்ச்சியே ஒரு குழந்தை உடல் உள ரீதியாக முழுமையாக வளர முடியும் என்ற கருத்திணை சங்க இலக்கிய பாடல்களின் வழி நம்மால் அறிய முடிகின்றது.