சங்க இலக்கியத்தில் இயற்பியல் துறைசார் கருத்தாக்கங்கள் (Physics Concepts in Sangam Literature)
Abstract
அன்றாட வாழ்க்கையில் மனிதன் அனைத்து நிலைகளிலும் அறிவியலைச் சார்ந்தே இருக்கிறான். அறிவியல் கருத்துக்களையும் அவை சார்ந்த கருவிகளையும் புறக்கணித்துவிட்டு இன்றைய உலகில் ஒரு மனிதன் வாழ்வது என்பது முடியாத காரியம் எனக் கூறலாம். சிறிய எழுதுகோல் முதற்கொண்டு தொழில் நுட்பமும் நுணுக்கமும் பொருந்திய இன்றைய மின்னணுவியல் கருவிகள் வரை உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் பலவாறு கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்திறனாய்வு என்பது கற்பனை, வருணனை, அணிநயம், சொல்நயம் என்னும் நிலைகளில் ஆராய்வது மட்டுமன்று. அறிவியல் செய்திகளையும் புலப்படுத்திக் காட்டவல்லது. இயற்பியல், வானியல் எனப் பல்வேறு துறைகளில் பண்டைய தமிழா்கள் வல்லுநா்களாகத் திகழ்ந்துள்ளனா் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரையின் வாயிலாக பழந்தமிழரின் அறிவியற் புலமை வெளிப்படும். புதிய ஆய்வுக் களங்களையும், புதிய சொற்களையும் பெற இயலும். இலக்கியங்களில் காணலாகும் அறிவியற் புதுமைகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலும்.