மலேசியாவில் தமிழ் சிறுகதை வரலாறும் அதன் காலவரிசை பகுப்பும் (History of Malaysian Tamil Short Stories and its Chronology)

  • Vijayalatchumy M., Ms. e Indian Studies Department, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Navin M., Mr. Indian Studies Department, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Abstract

மலேசியாவில் தமிழ்ச் சிறுகதை வரலாற்றைக் கூறுமிடங்களில் ந.பாலபாஸ்கரன் ஆய்வுகள் முன்னோடியாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். மலேசியத் தமிழ் சிறுகதை வரலாற்றினை 1930 முதல் 1979 வரையிலான நாற்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு உட்பட்டு அவர் ஆறு பிரிவுகளில் பகுத்துள்ளார். ஆயினும், ந.பாலபாஸ்கரன் ஆய்வுகளில் இடம்பெறாத பல தகவல்களை அதற்கு பின்பான ஆய்வுகளில் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவ்வாய்வு முதலாவதாக பாலபாஸ்கரன் வகுத்திருக்கும் ஆறு பகுப்புகளில் விடுபட்ட செய்திகளைத் தொகுத்து முழுமைப்படுத்த முயன்றுள்ளது. அடுத்து, 1979க்குப் பிறகான சிறுகதை இலக்கிய நகர்ச்சியை வகைப்படுத்தி, பகுத்துக் காட்டும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. ந.பாலபாஸ்கரன் தனது ஆய்வில் வரையறுத்திருக்கும் ஆறு காலகட்டங்களை உள்வாங்கிக்கொண்டு 1980 முதல் 2016வரை உருவாகியுள்ள இலக்கிய முன்னெடுப்புகளையும் அதன் போக்கையும் அவதானிக்க முடியும். அவற்றை இயக்கங்களின் காலம் (1980-1997), தனிநபர் காலம் (1998-2005), மாற்று ஊடகக் காலம் (2006-2016) எனும் மூன்று வகைமைக்குள் இவ்வாய்வு பொறுத்த முயன்றுள்ளது.

Published
2020-12-20
How to Cite
M., Vijayalatchumy; M., Navin. மலேசியாவில் தமிழ் சிறுகதை வரலாறும் அதன் காலவரிசை பகுப்பும் (History of Malaysian Tamil Short Stories and its Chronology). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 9, n. 2, p. 104-118, dec. 2020. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/27707>. Date accessed: 22 apr. 2021.
Section
Articles