பெரிய புராணத்தில் பக்தி (Devotional Norms (Bakthi) Depicted In Periyapuranam Text)
Abstract
பெரியபுராணம் எனும் நூல் தமிழ்ச் சைவர்களின் சமயம், மொழி, வாழ்வியல் நெறி, வாழ்வியல் கரணங்கள், பண்பாடு, கலை, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை ஏற்றக் கருவூலமாக உள்ளது. தமிழ் சைவ சமயம் பெரியபுராண நூலை சைவநெறிப் வழி வாழ்ந்து அடைதற்கு அரிய வீடுப்பேற்றினை அடைந்த அடியவர்களின் வரலாறு எனப் போற்றுகின்றது (அனைந்தோர் தன்மை). ஒவ்வொரு நாயன்மாரின் வரலாறும், அவர்கள் பக்தி நெறியில் நின்றே வீடுபேற்றினை அடைந்ததைத் தெளிவுப்படுத்துகின்றது. இந்த ஆய்வு கட்டுரை சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் பக்தி எனும் கருவைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. கைமாறு கருதாமல் பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துதலையே உண்மை பக்தி என்கிறார் சேக்கிழார் பெருமான். மேலும் இவ்வாய்வுக் கட்டுரையில் சேக்கிழார் பெருமான் நாயன்மார்கள் வாழ்ந்து காட்டிய மூன்று முகாமையான பக்தி நெறியை வரலாற்று சான்றாகப் பதிவிடுகின்றார். அவை கோவில் தொண்டு, இறைவழிபாடு, அடியார் தொண்டு ஆகும். இதனைத் தமிழ்ச் சைவ நூல்களில் குரு, லிங்க சங்கமம் எனும் பெயர்களிலும் அறியலாம்.