பாரதிதாசனாரின் கவிதைகளில் தமிழ்க்கட்டளைகளும் அவற்றின் வந்தன்மைகளும் (The pattern of plights and sternum in the poems of Bharatidasan)

Authors

  • Mohana Dass Ramasamy, Dr. Department of Indian Studies, University of Malaya, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.1

Keywords:

sternum plights, Stylistics, Bharathidasan Poems, Degree of Stress in Poems, Tamil, நடையியல், பாரதிதாசன் கவிதைகள், தமிழ்க்கட்டளைகளும் வன்மைத்தன்மையும், தமிழ்

Abstract

The centenary poet Bharathidasan is well-known among the Tamil beloveds’ as a poet who has heightened the status of Tamil among its users. Through his substantive words and sternum orders in various forms, he has placed a number of callings among the targeted youngsters to fight for own rights as well as for their maternal language, Tamil. Along this, he also has sent sternum plights to respect the rights of the feminine. As far as sternness is concerned, these plights and orders have been placed in more than one way. Some of them were direct, while others were indirect in nature. The nature of this reality is yet to be undisclosed. Most of the available studies related to Bharathidasan somehow in more than one way were very useful to understand his noble aims, themes and help to interpret them easily, but it is yet known anyone of them as shown initiative in analyzing the pattern of the plights according to their height of the sternness. This Paper has formulated a proto-type form of conceptual framework to analyze and understand the poet’s stress in issuing sternum plights.

 

 

Key words:

Stylistics, Bharathidasan Poems, Degree of Stress in Poems, Tamil, sternum plights.

 

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ் உலகம் கண்ட ஒப்பாரும்மிக்காருமில்லா புலவப்பெருமக்களுள் பாரதிதாசனும் ஒருவராக தமிழன்பர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தார். தனது பாடுத்திறத்திறனால் இவர்  தமிழின் சிறப்பை உயர்த்திய நன்கவியாகவும் ஆளுமை மிக்க சொற்களாலும் பல்வேறு வடிவிலான உணர்ச்சிமிகுந்த கட்டளைகளாலும் இளைய சமுதாயம் தமது  உரிமைக்காகவும், தாய் மொழியாகிய தமிழுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் வீறுகொண்டு போராட வேண்டுமெனத் தூண்டுதல்களையும் விடுத்தார்.  பல்வேறு தமிழ்க்கட்டளைகளை இந்நோக்கத்திற்காகப் பிறப்பித்துள்ளார்; அவற்றுள் சில நேரடியானவை, இன்னும் சில மறைமுகமாகவை. மேலும் சிலவற்றை விதந்து கூறும் பாங்கிலும் கூறியிருக்கின்றார். இவரது கவிப்படைப்புகளை ஒட்டி பல்வேறு படைப்புகள் வெளியாகியிருந்த போதும், அப்படைப்புகளின் உண்மை அடையாளங்கள் இன்னமும் வெளிவந்த வண்ணமாக உள்ளன; அவற்றுள் பல அவருடைய உயர்நோக்கங்களையும் கருப்பொருள்களையும் புரிந்துகொள்ள ஏதுசெய்வனவாக உள்ளன. எனினும், இதுவரையில் எந்த ஆய்வாளரும் அவருடைய கட்டளை அமைப்புமுறைகளையும் அவற்றுக்கான  கடுமையளவின் அடிப்படையினை வகைப்படுத்துவதில் எம்முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இக்கட்டுரை அப்பணியினைச் செய்கின்றது. பரதிதாசன் விடுத்த தனது தமிழ்கட்டளைகளை வகைமைப்படுத்திக் காட்டும் முயற்சி இது. ஒரு முன்மாதிரி சட்டகத்தின் அடிப்படையில் உருவாக்கம் செய்யப்பட்ட இக்கட்டமைப்பானது, இக்கவிஞரின் கட்டளைகளைப் புரிந்துகொள்ளவும், மேற்படி பகுப்பாய்வுகள் நிகழ்த்தவும் பயன்படுவதாக அமையும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Mohana Dass Ramasamy, Dr., Department of Indian Studies, University of Malaya, Malaysia.

The author is a Senior Lecturer in The Department of Indian Studies, University of Malaya, Malaysia.

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles