தொல்தமிழகத்து அரசியலில் நன்னன் (Nannan’s part in the politics of ancient Tamilnadu)

Nannan’s part in the politics of ancient Tamilnad

Authors

  • Kanmani Ganesan retired

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.12

Keywords:

நன்னன், வேள், வேந்தர், காவல் மரம், எழுமுடி கெழீஇய ஆரம்.

Abstract

நன்னனை மையப்படுத்தி நிகழும் போர்கள், காரணங்கள்,முடிபுகள்,  குழப்பங்கள் ஆகியவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்று கா.அப்பாத்துரையார்  எழுதிய நூல் எல்லாப் போர்களையும் விவரித்தாலும் போருக்குக் காரணமான சமூகநிலையை நாம் ஆராய வேண்டிய தேவை உளது. அத்துடன் ‘எழுமுடி கெழீஇய ஆரம்’ பற்றிய அவரது ஐயப்பாடு நீக்க வேண்டியதாகிறது. “Who Are The Dravidians” என முனைவர் ஆன்ட்ரே F.ஸ்ஜோபெர்க் எழுதிய கட்டுரை; மொழியியல், பண்பாட்டியல், தொல்லியல், மரபணுவியல் முதலியவற்றின் அடிப்படையில்; ‘திராவிடர் ஒன்றுக்கு மேற்பட்ட மக்களினத்தின் கூட்டுக்கலவை’ என்று முடிபுரைப்பது தொகை நூல்களை வேறு கோணத்தில் பார்க்கத்  தூண்டுகிறது. முனைவர் ஜார்ஜ் L.ஹார்ட் ‘பண்டைத் தமிழகத்தில் இருந்த சாதி அமைப்பு’ பற்றி எழுதிய கட்டுரையில் ‘நன்னனின் மாமரம் ஒரு காவல்மரம்’ என்று சொல்லி உள்ள கருத்தும்; பொ.வே.சோம சுந்தரனார் நன்னனிடம் வேந்தருக்கு உரிய நாற்படை இருந்தது என்று சொல்லிச் செல்வதும் இவ்ஆய்வுக்குத் தூண்டின. நாற்படை வேந்தருக்கு உரியது; நன்னன் வேளாளன் ஆவான். தொகைநூற் தரவுகள் முதன்மை ஆதாரங்கள் ஆகின்றன. ஆய்வாளர் கருத்தும், உரையாசிரியர் விளக்கமும் இரண்டாம் நிலைத் தரவுகளாகின்றன. வேந்தருடன் நன்னன் கொண்ட பகைமை அவனைப் பெண்கொலை செய்யத் தூண்டியது. மரபுவழிப்பட்ட விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை அமைகிறது. 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles