முகவுரை

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் எட்டாவது தொகுபின் இரண்டாவது பகுதியாகிய இவ்விதழை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு செய்கிறது. அறையாண்டிதழாக வெளியீடு காணும் இவ்விதழில் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

             à®šà®¿à®™à¯à®•à¯ˆà®¯à¯ˆà®šà¯ சேர்ந்த முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மியின் படைப்பாக அமையும் இத்தொகுதியின் முதல் கட்டுரை ஜப்பானிய (மன்யோசு-அகப்பாடல்கள்), தமிழ் அகப்பொருள் இலக்கிய மரபுகளை விளக்கி அவர்றிடையே இருக்கும் நெருங்கிய இலக்கிய ஒற்றுமைப்பட்ட பண்புகளைக் விளக்குவதாக அமைந்துள்ளது. அடுத்தது பொறியாளர் சு. சிவராம்கிருஷ்ணனின்  ‘தமிழும் , பாஸ்கரா ஜோதிடமும்’ எனும் தலைப்பிலான கட்டுரை தமிழ் மொழி பரிணாமத்திற்கும் பாஸ்கரா ஜோதிட பரிணாமத்திற்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

             â€œà®šà®°à®šà¯à®µà®¿à®©à¯ சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனை” எனும் தலைப்பிலான முனைவர் சரவணன் பி. வீரமுத்து, முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை ஆகியோரின் இக்கட்டுரை மலேசிய பெண் எழுத்தாளர்கள் பெண்ணியச் சிந்தனைகளைப் படைப்பதில் தனித்துவம் பெறும் நிலையை திறம்பட விவரிக்கின்றது. அடுத்து வரும், த. சுந்தரராஜ் அவர்களின், “அஷ்டாத்தியாயீ - தொல்காப்பியம் - அல்-கிதாபு ஆகிய மூன்று முதல் இலக்கணங்களின் உயிரொலி விளக்கம்: ஓர் ஒப்பாய்வு” எனும் கட்டுரை இம்மூன்று மரபிலக்கணங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, தனித்தன்மை ஆகியவற்றை இனம் காண்கிறது. பண்பாடுமிக்க   சமூகத்தை  à®‰à®°à¯à®µà®¾à®•à¯à®•à¯à®µà®¤à®¿à®²à¯ இலக்கியத்தின் பங்களிப்பைக் கற்றல்  கற்பித்தல்  நடவடிக்கைகளில் மூலம் திறம்பட வெளிப்படுத்தும் இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்ஜ்களின் கட்டுரை இத்தொகுதியின் ஐந்தாவது கட்டுரையாக அமைகின்றது.

             à®…டுத்து வரும் கா. சுவாதி & மருத்துவர் ஜெ. ஸ்ரீராம் இருவரின் கட்டுரை மணிமேகலை காப்பியத்தில் காணக்கிடக்கும் பல மனவியல் கருத்துக்களும் ஆய்ந்து படைப்பதாக அமைந்துள்ளது. தொடரும் முனைவர்சு.மணிமாறன் அவர்களின்  கட்டுரை மலாயா விடுதலைக்கு முன் தோன்றிய சமய இயக்கங்களின் தெளிவானதொரு அலசலாக அமைகின்றது.  

            “மீளா அடிமை”, எனும் முனைவர் இரா. சீதா லட்சுமி அவர்களின் கட்டுரை நால்வர் பெருமக்கள் வைராக்கிய பக்தியில் ஒரு துளியும் பிறளாது நின்ற மேன்மையை தக்க சான்றுகளுடன் விளக்கி நிற்கின்றது. அடுத்து வரும் ஷா. முஹம்மது அஸ்ரின் கட்டுரையானது இக்காலத் தமிழர்களின் பண்பாட்டு மூலங்களுள் ஒன்றாக நற்றிணை அமைவதாகப் பேசுகின்றது.

            மலாயாவில் இந்தியர்களுக்கு எதிரான கம்யூனிஸ்ட் வன்முறைகளைச் சிறப்புற வெளிப்படுத்திக் காட்டுவதாக பரமேஸ்வரி கிருஷ்ணன், ஜெ.இந்துஜா ஜெயராமன் ஆகியோரின் கட்டுரை அமைகின்றது. தொடரும் பா. உமா அவர்களின் கட்டுரையானது, யாஸ்கர், பாணினி ஆகிய சமஸ்கிருத அலங்கார ஆசிரியர்களின் இலக்கிய உவமையணி ஒப்பீட்டு விளக்கத்தால் சிறப்புறுகிறது. இயற்கையைப் போற்றி வாழும் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதை நாலடியாரின்  துணைகொண்டு தெள்ளத்தெளிவாக விளக்கும் மு.சங்கரின் கட்டுரை இத்தொகுதியில் அடுத்து இடம்பெறுகிறது.

            பாரதியின் இலக்கிய வடிவங்களை முன்வைத்து த.மேகராசா அவர்கள் நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் பாரதியின் செல்வாக்கைத் திறம்பட விளக்குவதாக தொடரும் கட்டுரை அமைகிறது. அதனை அடுத்து முனைவர்சு.மணிமாறன் & கோவி.சிவபாலன் ஆகிய இருவரின் கட்டுரையானது ஆகம விதிப்படி அமைக்கப்படும் ஆலயங்கள் எவ்வகையில் மருத்துவ மையங்களா பக்தர்களுக்குப் பயனளிக்கிறது என்பதை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. இத்தொகுப்பின் இறுதிக் கட்டுரையானது மலேசியாவின் மலாக்கா செட்டிகள், மலேசியத் தமிழர்கள் ஆகியோரின் முதன்மைப் பண்டிகைகளையும் வழிபாட்டு முறைகளையும் தெளிவுற முன்வைப்பதாக அமைகின்றது. 

            ‘தமிழ்ப் பேராய்வு’, பல அறிஞர்களின் சிறந்த ஆய்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. பதிப்பாசிரியர் குழு இவ்வேளையில் இந்த எட்டாவது தமிழ்ப் பேராய்வின் இரண்டாவது பகுதியின் வெளியீட்டிற்கு துணை புரிந்த கட்டுரையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது. இத்தொகுப்பின் பதிப்புச் செலவை மனமுவந்து ஏற்றுக் கொண்ட அல்மா ஹெர்பல் நேச்சர் நிறுவணத்தில் தோற்றுனரும் தலைமை நிர்வாகியுமாகிய திருமிகு MGL. வேலாயுதம் அவர்களின் தாராள மனதை இவ்விடம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

 

பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன்
தலைமைப் பதிப்பாசிரியர்
31.
12.2019