தொகையிலக்கியத்து முது பெண்டிரும் பேஎய்ப் பெண்டிரும் (Muthupendir and Peyppendir in the Anthologies)

Authors

  • Dr.S.Kanmani Ganesan Department of Tamil in Srikaliswari College, Sivakasi. Tamilnad.

Keywords:

பண்டைத்தமிழ்ப் பெண்டிர், முதுபெண்டிர், பேஎய்ப்பெண்டிர், மகப்பேறில்லாப் பெண்டிர், சடங்குகளும் பெண்டிரும், பாசுபதமும் பெண்டிரும்

Abstract

தொகையிலக்கியத்து முதுபெண்டிரையும் பேய்ப் பெண்டிரையும் ஒப்பிட்டு அவர்களது சமூகநிலையைக் கணிப்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். பெண்களின் நிலையைத் தெளிவிக்காமல் எந்தச் சமூகவரலாறும் நிறைவு பெறாது. சமூகக்கொள்கைகள் அவ்வச் சமூகப் பெண்களின் நிலையைத் தீர்மானிக்கின்றன. எனவே இருதிறப் பெண்களை ஒப்பிடும் சமூகவியல் ஆய்வாகக் கட்டுரை அமைகிறது. முதுபெண்டிர் பற்றிய அகஇலக்கியச் செய்திகள், பேஎய்ப்பெண்டிர் பற்றிய புறஇலக்கியச் செய்திகள் ஆகியன முதனிலைத் தரவுகளாகின்றன. பிற தொகைநூற் செய்திகள்; உரையாசிரியர், ஆய்வாளர் கருத்துகள் ஆகியன இரண்டாம்நிலைத் தரவுகள் ஆகின்றன. முதுபெண்டிர் சமூகத்தில் மிகுந்த மதிப்புடன் இருந்தனர்; மகப்பேறில்லாப் பேஎய்ப்பெண்டிர் வாழ்வின் விளிம்புநிலையில் இருந்தனர்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-12-25

Issue

Section

Articles