யோகக்கலையின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் (The Origin and Development of Yoga)

Authors

  • Senior Lecturer Dr. R. Seeta Lechumi

Keywords:

யோகம், புராணம், இந்தியக் கலை, வேதம், மகாபாரதம், Yoga, Purana, Indian Art, Veda, Mahabaratha

Abstract

ஆய்வுச் சுருக்கம்

இப்பூவுலகில் தோன்றிய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், ஞானிகள், யோகிகள் ஆகியோர் மனிதகுலத்திற்காகப் பல பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் இலக்கியம், வேதம், தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று அதனை மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் வரையறை செய்துள்ளனர். அத்தகைய துறைகளுள் மருத்துவமும் யோகக்கலைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன. மனித உடலும் உள்ளமும் வெகுகாலத்திற்கு நிலைபெறச் செய்ய உதவும் இவ்விரு துறைகளும் தற்போது பல்வேறு சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் பழமொழிக்கொப்ப உடலுக்கு எந்தவொரு நோவும் ஏற்படாமல் பாதுகாத்து நிறைவான வாழ்க்கையை வாழ சித்தர்கள் தந்த வரமாக யோகக்கலை பெரும்பங்காற்றுகின்றது. நோயுற்று அவதியுறுவதைக் காட்டிலும் நோய் ஏற்படா முன்னே உடலை மேம்படுத்திக் கொள்வதே தற்போதைய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அறிவுக்கூர்மையான செயலாகும். அவ்வகையில் நோய்கள் பீடிக்காத வண்ணம் உடலைச் செம்மைப்படுத்தக்கூடிய வல்லமையைக் கொண்ட யோகக்கலையானது மற்ற கலைகளைவிட மேலானது எனில் மிகையாகாது.

 

Abstract

Siddhas, rishis, sages, and yogis who appeared in this world have left many treasures for mankind. They have specialized in various fields like literature, Vedas, philosophy, martial arts, and medicine and defined them in terms of human use. Among such disciplines, medicine and yoga are very important in the present context. These two fields, which help to sustain the human body and mind for a long time, are now gaining significant popularity among various communities. As the saying goes, 'A disease-free life is an infinite wealth', and yoga plays a major role as a gift the Siddhas gave to protect the body from any disease and lead a fulfilling life. Nowadays, the smartest thing to do is to improve the body before the disease occurs rather than suffer from illness. It is no exaggeration to say that Yoga, which can refine the body so that it does not suffer from diseases, is superior to other arts. In this way, the primary aim of this research paper is to investigate the origin and development of yoga, which has various benefits and has contributed to the development of mankind. This paper explores the explanation of the meaning of the word 'Yoga', the background of Yoga, Patanjali and Yoga, Thirumoolar and Yoga, Yoga in Vedas, Yoga in Upanishads, Yoga in Tantrism, Yoga in Smriti Literature, and finally, Yoga in Bharata and Folklore

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles