தமிழர் பாரம்பரியத்தில் ‘காப்பு’ (‘Kappu’ in Tamil Tradition)

Authors

  • Senior Lecturer Dr. Silllalee S. Kandasamy
  • Professor Dr. M. Rajantheran
  • Senior Lecturer Dr. Ravindaran Maraya

Keywords:

காப்பு, திருவிழா, சடங்குகள், திருமணம், வளைகாப்பு, Kaappu, Hindu Festival, Rituals, Marriage, Valaikappu ritual

Abstract

ஆய்வுச் சுருக்கம்

மனித சமுதாயத்தின் அடைவின் உச்சம் நாகரிகம். நாகரிகத்தை அடைந்த இனம் மற்றவர்களுக்கு அவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு தனது வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் காலத்திற்குத் தக்கவாறு தனது மாற்றங்களை உள்வாக்கிக் கொள்வதோடு, பிற உலக நாகரிகங்களோடு தொடர்பினை மேம்படுத்திக் கொள்கிறது. ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது அவர்களின் பண்பாட்டுக் கூறுகளே ஆகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாவன அச்சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, சமயம், நம்பிக்கைகள், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் இயைந்தே தோன்றுகிறது. பண்பாடு காலத்திற்கு ஏற்ப மாற்றம் காணலாம் ஆனால் அதன் தனித்துவம் மாறாதது. பண்பாட்டுக் கூறுகளுள் சடங்குகளாவன எப்போது ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையைக் கட்டிக் காக்கும் அடையாளமாக விளங்குகிறது. தமிழர் பண்பாட்டைப் பொருத்த வரையில் இவர்களின் சடங்குகள் யாவும் சமய நம்பிக்கையை மட்டும் சார்ந்திருக்காமல் அறிவியல், வாழ்வியல் தேவை, தத்துவங்கள், நன்நெறிக் கூறுகள், இயற்கையோடு இயைந்து வாழ்தல், பொருளாதாரச் சிந்தனை, சமூகக் கட்டமைதியைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகவே விளங்குகின்றன. இவ்வாறானா தமிழரின் பண்பாட்டுச் சடங்குகளுள் ஒன்றாக இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதுதான் காப்பு கட்டும் சடங்காகும். தற்போதைய ஆய்வானது தமிழர்களின் வாழ்க்கையில் பல்வேறு சமய மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் காப்பிடுதல் சடங்கானது எவ்வாறு கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதனை ஆராய்கிறது. அதோடு இச்சடங்குகளின் அறிவியல் மற்றும் தத்துவச் சிந்தனைகளையும் ஆராய்ந்து முன்வைக்கிறது.

 

Abstract

Civilisation represents the peak of a society’s progress. When a civilised society shares its knowledge with others, it results in many benefits: further progression, fast accommodation according to rapid changes in the world, and the construction of a strong network with other global communities.  A society’s civilisation is developed upon its cultural values, reflected in its daily lives, religion, beliefs, science, and technology. Despite the changes in cultural values of a society prompted by time, the individuality of these values remains steadfast. The cultural rituals embedded within the values uphold the culture of a community, which also extends to the Tamil culture. The Tamil cultural rituals do not solely reflect the society’s religious beliefs but expound the society’s science, life requirements, philosophy, moral values, oneness with nature, financial values, and the structure of the community. Tying Kaapu is a cultural ritual that highlights Tamil culture's previously mentioned significant components. This paper aims to investigate the manners in which the Kaapu ritual is observed in most Tamil religious and cultural events while analysing the science and philosophy ingrained in the practice.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles