‘அத்திப் பூ’ மலேசியத் தமிழ்ப் பெருங்காப்பியமா? (Is ‘Atti poo’ a Malaysian Tamil Epic?)

Authors

  • Mr. Navin G Ganeson

Keywords:

அத்திப்பூ, பெருங்காப்பியம், மலேசியா, காப்பிய இலக்கணம், Attip Poo, Perungapiyam, Malaysia, Epic grammar

Abstract

ஆய்வுச் சுருக்கம்

இந்த ஆய்வு, அத்திப்பூ எனும் மலேசியக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் முக்கிய நோக்கமானது,  அத்திப்பூ எனும் மலேசியக் காப்பியத்தில் பெருங்காப்பிய இலக்கணக் கூறுகளைக் கண்டறிவதாகும். மேலும், இந்த ஆய்வில் நோக்கமாகக் கருதப்படுவது எதுவென்றால், அத்திப்பூ எனும் காப்பியத்தில் பெருங்காப்பிய இலக்கணக் கூறுகளை விளக்குதல் என்பதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில்  மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கான தரவுகள் யாவும் நூலக ஆய்வு அணுகுமுறையில் கையாளப்பட்டுள்ளது. இவ்வகை, நூலக ஆய்விற்கு ஏற்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் பயன்படுத்தி விளக்கவியல் அணுகுமுறையில்  இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   மேலும், கிடைக்கப் பெரும் தகவல்கள் அனைத்தும், ஆய்வின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. ஆராயப்பட்ட, தரவுகளை ஆய்வு நோக்கதிற்கு ஏற்ப வகைபடுத்தி, பத்தி (Text analysis) முறையில் பகுத்தாயப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 10 பெருங்காப்பிய இலக்கணக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் வாயிலாக மலேசியக் காப்பியங்களில் பெருங்காப்பியத்தின் இலக்கணக் கூறுகளைப் பின்பற்றி பெருங்காப்பியமாகப் படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 

Abstract

The main objective of this qualitative study is to identify the epic major grammatical elements in Malaysia’s ‘Atti poo’ epic. On top of that, this study explains the epic grammatical elements prevalent in ‘Atti poo’. A descriptive approach has been utilized using books and research articles suitable for library research. All information has been analyzed based on the objective of the study. The research data has been classified according to the purpose of the study, and textual analysis has been applied. The results reveal the discovery of 10 essential epic grammatical elements that categorise ‘Atti Poo’ as a Perungapiyam.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles