மலேசிய இந்தியத் தொண்மைத் தொடர்புகளும் தற்கால அடையாளங்களும்

Early Contacts between Malaysia & India and Malaysian Indians’ Contemporary Identities

Authors

  • Professor Dr. M. Rajantheran Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Dr K.Silllalee Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.
  • K. Matana Sekolah Jenis Kebangsaan Tamil Taman Tun Aminah, Johor, Malaysia

Keywords:

இந்தியமயமாக்குதல், மலேசிய இந்தியர்கள், இந்தியத் தொண்மை வாணிபம், தென்கிழக்காசியா, இந்து-பௌத்தம்

Abstract

ஆய்வுச் சுருக்கம்

 

தென்கிழக்காசியாவிற்கும் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இடையே பண்பாட்டுத் தொடர்புகள், கிருத்துவுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. தென்கிழக்காசிய மக்கள் தங்களின் வாழ்வியல் முறைக்கு ஏற்ப இந்தியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்டப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டுள்ளமையைப் பொதுவில் இந்தியமயமாக்குதல் (Indianization) எனக் குறிப்பிடுவர். கடலோடிகளின் வாயிலாகவே இந்திய-மலாயாவிற்குமான வரலாற்றுக்கு முந்தைய (Pre-History) தொடர்புகள் தொடங்கியது என அறியப்படுகின்றது. இந்தியாவிற்கும் கிரேக்க-ரோமபுரிப் பேரரசுக்கும் (Graeco-Roman Empire) இடையே வலுபெற்றிருந்த வியாபாரத் தொடர்பே இந்திய-மலாயாவிற்குமான வியாபாரத் தொடர்புகள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்தது. இந்த வர்த்தக மேம்பாட்டில் கிரேக்க ரோமானியர்களுடனான வர்த்தகத் தேவைகளை ஈடுகட்டப் போதுமான சரக்குகள் இல்லாமையால் இந்திய வியாபாரிகள் தென்கிழக்காசியாவில் குறிப்பாக மலாயாவின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். தென்னிந்திய வணிகர்கள் கெடா மாநிலத்தின் குவாலா மெர்போக்கை நுழைவாயிலாகக் கொண்டுதான் மலாயாவின் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். மலாயாவின் தொடக்க கால மன்னர்களின் ஆட்சியின் புத்த பிக்குகளும் பிராமணர்களும் அவர்களுக்குச் சேவையாற்றினர். இவர்கள் வாயிலாகவும் இந்தியப் பண்பாட்டுக் கூறுகள் பரவின. தொடக்க காலத் மலாயாவில், அரச கொள்கை உருவாக்கத்திற்கு இந்து மற்றும் பௌத்த சமய போதனைகளும் நம்பிக்கைகளும் அடிப்படையாக அமைந்திருந்தன. இவ்வாறு மிகத் தொண்மையான பண்பட்டுத் தொடர்புகள் தொடக்க காலத்தில் இருந்த போதும், இதனைத் தற்போதைய மலேசியத் தமிழர்களின் அடையாளமாகக் காண்பது பொருந்தாது. தற்போதைய மலேசியத் தமிழர்கள் பிரிட்டீசார் காலத்தில் தோட்டத்தொழிலாளர்களாகவும், அரசாங்க ஊழியர்களாகவும், வியாபாரிகளாகவும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மலாயாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களாவர். தொடக்ககால மலேய மக்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு சிறந்த பண்பாட்டுப் பங்களிப்பை தமிழ்-இந்திய நாகரீகம் செய்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-07-20

Issue

Section

Articles